214. சொர்ணகடேஸ்வரர் கோயில்
இறைவன் சொர்ணகடேஸ்வரர், வெண்ணையப்பர்
இறைவி பிருஹந்நாயகி, நீலமலர் கண்ணம்மை
தீர்த்தம் பெண்ணையாறு
தல விருட்சம் புன்னை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருநெல்வெண்ணை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'நெய்வணை' என்று வழங்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. உருந்தூர்பேட்டையிலிருந்து சேலம் செல்லும் சாலையில் சென்று எலவனூர் கோட்டை நெடுஞ்சாலையில் 'நெய்வணை' கைகாட்டி வழியே சென்றால் சுமார் 1 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. சற்று சிரமமான வழி. நன்கு விசாரித்துச் செல்லவும்.
தலச்சிறப்பு

Tiruneivennai Gopuramசிறிய கோயில், சுவாமியும், அம்பிகையும் சிறிய வடிவத்தில் அருள்பாலிக்கின்றனர். கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவனின் பெயர் 'பொற்குடம் கொடுத்தருளிய நாயனார்' என்று உள்ளது. இதன் வரலாறு எதுவும் கிடைக்கவில்லை. இப்பெயரே சமஸ்கிருதத்தில் 'சொர்ணகடேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறது. சனகாதி முனிவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

Tiruneivennai Muruganஇக்கோயிலில் விநாயகர், முருகப்பெருமான், சண்டேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்தங்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இக்கோயிலில் தேவார மூவர்களில் ஒருவரான சம்பந்தர் கையில் தாளம் இன்றியும், சுந்தரர் நடனக் கோலத்திலும் காட்சி தருகின்றனர்.

Tiruneivennai SundararTiruneivennai Sandesarதிருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 9486282952, 04149-291786

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com